Header

Sri Lanka Army

Defender of the Nation

09th April 2020 23:00:13 Hours

மேலும் நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக,தரவிக்குள கிராமம் இன்றிலிருந்து (9) தனிமைப்படுத்தல்-நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (9) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இராணுவத்தினரினால் நிர்வகிக்கபபட்டுவரும் கண்டக்காடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து 37 நபர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் இன்று காலை (9) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். ஏற்கனவே 37 நபர்கள் தங்கியிருந்த ஒரு கட்டிடத்திற்குள் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த காலத்தை நீட்டிக்க வேண்டியிருந்தது. அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு கோவிட்-19 தொடர்பான பி.சி.ஆர் சோதனை இரண்டு முறை செய்யப்பட்டது. அதன் பின்னர் அப்பரிசோதனை எதிர்மறையானவை என்பதை உறுதிப்படுத்தப்பட்டன. முப்படையினரால் நிரவகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு இதுவரை மொத்தமாக 3459 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியேறியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, நாட்டிலுள்ள அனைத்து தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் சுமார் 1311 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர் ”என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

"அதேபோல், இரத்னபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப்படும் 23 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 67 நபர்கள் நேற்று மாலை (8) தியதலாவையிலுள்ள உள்ள கஹகொல்ல தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அதே போல், அண்மையில் இந்தியாவில் இருந்து வந்த அக்குரெஸ்ஸ பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோவிட்-19 நோயாளிகளின் 16 உறவினர்கள் நேற்று இரவு 8 ஆம் திகதி பூனானை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அக்குரனை மற்றும் அட்டலுவகம கிராமங்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மார்ச் 18 ஆம் தேதி மன்னாரில் உள்ள தரவிக்குளம் கிராமத்தில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட புத்தளத்தைச் சேர்ந்த மற்றொரு கோவிட்-19 நோயாளி ஏராளமான மக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த 900 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4600 க்கும் மேற்பட்ட நபர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்வது கடினம் என்பதால், அப்பிரதேசம் இன்று 9 ஆம் திகதி முதல் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது "என்று அவர் மேலும் கூறினார்.

"மாடி குடியிருப்புகளில் மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் மனதை சமநிலையடையச் செய்வதற்காகவும் அவர்களின் நல்வாழ்வையும் நிலைநிறுத்துவதற்காகவும், ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் வேளையில் போதுஇ முப்படையினர் மற்றும் பொலிசாரினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் பொழுதுபோக்கு இன்னிசை நிகழ்வுகளை நடத்துகின்றனர். இராணுவ இசைக் குழுவினரால் அத்தகைய இன்னிசை நிகழ்வுகள் மொரட்டுவ சோய்சா பிளாட்ஸில் ஒன்றை நடத்திய அதேவேளை, இன்னும் சில நிகழ்ச்சிகளை கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் இசைக் குழுக்கள் நடத்தியது. இதேபோல், இராணுவ இசைக் குழுவினரால் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை இன்று (9) மாலை 6.30 மணிக்கு ராஜகிரியாவில் உள்ள ஃபேர் மவுண்ட் தொடர்மாடிக் கட்டிடத்திற்கு அருகில் நடத்த திட்டமிடப்பட்டது. கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் இசைக் குழுக்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் மூன்று வெவ்வேறான இடங்களில் நடத்த உள்ளன”என்று லெப்டினன் ஜெனரல் சில்வா மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.Best jordan Sneakers | adidas Yeezy Boost 350