Header

Sri Lanka Army

Defender of the Nation

10th April 2020 21:07:11 Hours

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியவர்களை கைதுசெய்ய கடற்டையினர் பொலிசாருக்கு ஒத்துழைப்பு- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (10) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

"தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறிய புத்தலம் பகுதியைச் சேர்ந்த 59 நபர்கள் மற்றும் சிலாவ் பகுதியில் இரண்டு கோவிட்-19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 27 நபர்கள், மொத்தம் 86 பேர் இராணுவத்தால் நடத்தப்படும் கட்டுகெலியாவா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், மற்றொரு கோவிட்-19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெல்லம்பிட்டி மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 10 உறவினர்கள் நேற்று மாலை (9) பூனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல்,கோவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அக்கரைப்பத்து பகுதியைச் சேர்ந்த 10 நபர்கள் தனிமைப்படுத்துவதற்காக தம்மின்ன தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். "என்று நோப்கோ தலைவர் கூறினார்.

"அதேபோல், ஒரு மத நிகழ்வில் கலந்து கொண்டு இந்தோனேசியாவிலிருந்து மார்ச் 8 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த பதுள்ளை பகுதியைச் சேர்ந்த 4 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முறையினை முடித்த பின்னர், மறுபடியும் நேற்று இரவு (9) அடிப்படை தனிமைப்படுத்தலுக்காக கஹகொல்ல தனிமைப்படுத்தல்மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதற்கு மேலதிகமாக , ஒரு சில கோவிட் -19 நோயாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் மாத்தலை பகுதியைச் சேர்ந்த மேலும் 8 பேர் கஹகொல்ல தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்பொழுது 1455 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 12 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.”என்று லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

"ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒரு கோவிட் -19 நோயாளியைக் கண்டறிந்த பின்னர் சமீபத்தில் 23 பேர் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அந்த தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுகாதார விதிகளை மீறுவதாக கடற்படை புலனாய்வுத்துறையினர் கண்டறிந்தனர். அதன்படி, பொலிசார் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.நான் நேற்று மற்றும் இன்றய தினம் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நான்கு கிருமிநாசினி அறைகள் கண்டி ஸ்ரீ தலதா மாலிகா, மகரகம அபேக்ஷ வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் தெல்தெனிய மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. " என்று லெப்டினன் ஜெனரல் சில்வா மேலும் கூறினார். latest Nike release | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf