Header

Sri Lanka Army

Defender of the Nation

07th April 2020 19:58:27 Hours

இராணுவத்தினரால் மேம்படுத்தப்பட்ட புதிய தனிமைப்படுத்தும் வைத்தியசாலை திறந்து வைப்பு

நமது நாட்டின் தற்போதய தேவையினை கருத்திற் கொண்டு பாதுகாப்புத் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 1ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் படையினரால் சிலாபம் இரனவிலவில் உள்ள கைவிடப்பட்ட முன்னாள் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கட்டிட வளாகமானது தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியசாலையாக மேம்படுத்தப்பட்டு இன்று பிற்பகல் (7) ஆம் திகதி அரச அதிகாரிகளிடம் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவின் ஆரம்ப நிகழ்வில் சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

40 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தனிமை வைத்தியசாலை , வைத்தியசாலையயில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ரோபோ தொழில்நுட்பம் மற்றும் தன்னியக்க பைலட் வாகன வசதிகளுடன் காணப்படுகின்றது. நோயாளிகள் தனித்தனி அறைகளுடன் மட்டுப்படுத்தப்பட இவ் வைத்தியசாலை 14 மருத்துவர்கள் மற்றும் 20 மருத்துவ ஊழியர்களைக் கொண்டு நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட ஹேமாஸ் தனியார் நிறுவனம் மற்றும் அட்லஸ் நிறுவனம் நிதியுதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ரோபோக்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் ஒரு சிறப்பு விமான அமைப்பு மூலம் நோயாளிகளுக்கு மருந்து, பானங்கள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கும், ரோபோ கேமராக்கள் மூலம் நோயாளிகளுடன் தொடர்புகொள்வதற்கும், நோயாளிகளுக்கு நிலையான காற்றுச்சீரமை முறையை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையிலான தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் தவிர்ப்பதை உறுதி செய்வதற்கும் வல்லவை.

கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான செயல்பாட்டில் ஈடுபடும் ஏனைய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி அவர்கள் புதிய தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியசாலையினை திறந்து வைத்தார். புதிய வார்டுகளுக்கு அன்றைய விருந்தினர்கள் பின்தொடர்ந்தனர்.

1ஆவது பொறியியலாளர் படையணியின் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆசிரி முஹந்திராம்கேவின் நெருங்கிய மேற்பார்வையின் கீழ்,1ஆவது பொறியியலாளர் படையணியின் படையினர் இரண்டு வாரங்களுக்குள் முழு கட்டிடத்தையும் மேம்படுத்தி தயாரிக்கும் பணியை நிறைவு செய்தனர். இந்த வளாகத்தில் சுகாதார மற்றும் சமையல் வசதிகள், ஓய்வு அறைகள்இ சரக்கறை, சமையலறை போன்றவை உள்ளன.

மார்ச் 26 அன்று சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர் பல அதிகாரிகளுடன் இணைந்து இந்த இடத்திற்குச் சென்று தனிமைப்படுத்துவதற்கான புதிய இடமாக அதை மேம்படுத்த முடிவு செய்தனர்.

அன்றைய நிகழ்ச்சியின் இறுதியில், கௌரவ சுகாதார அமைச்சர் மற்றும் லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்களின் முயற்சிகளைபற்றி எடுத்துக்கூறியதோடு இந்த திட்டத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் வெற்றிபெறச் செய்ய இரவும் பகலும் உழைத்த அனைவருக்கும் பாராட்டியதோடு நன்றியினையும் தெரிவித்தனர்.

மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ்அதிகாரிகள், மாகாண சபை மற்றும் நகர சபை அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். trace affiliate link | Nike SB