Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2020 19:40:41 Hours

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட நபர் மட்டுமே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், குடும்ப உறுப்பினர்கள் அல்ல ”- நோப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (5) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

குண்டசாலே தனிமைப்படுத்தப்பட்ட மையம் (3), கடற்படை நிர்வகிக்கும் பூச தனிமைப்படுத்தப்பட்ட மையம் (11) மற்றும் விமானப்படை நிர்வகிக்கும் முல்லைத்தீவுதனிமைப்படுத்தப்பட்ட மையம் (203) ஆகிய மொத்தமாக 217 நபர்கள் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் இன்று காலை (6) ஆம் திகதி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வெளியேறிய அனைவருமே தங்கள் வீடுகளில் இன்னும் இரண்டு வார கால சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட நபர் மட்டுமே அவர் திரும்பி வந்தபின் இந்த வழியில் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம், மேலும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அல்ல. முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் அந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மொத்தம் 3386 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் இதுவரை வெளியேறினர். தனிமைப்படுத்தப்பட்ட மற்றொரு குழுவினரும் நாளை (7) காலை 14 நாட்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிற்கு செல்ல தயாராக உள்ளனர்இ ”என்று லெப்டினன் ஜெனரல் சில்வா கூறினார்.

அதன்படி, அனைத்து 40 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், 36 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் இராணுவத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. 3 விமானப்படை மற்றும் 1 கடற்படையினரால் தற்போது நிர்வகிக்கப்படுகின்றன. 1287 நபர்களைக் கொண்ட ஒரு குழு இன்னும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பணியின் கீழ் உள்ளது. அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் ஆயுர்வேத மருத்துவர்கள், ஹோமியோபதி பயிற்சியாளர்கள், சுதேச மருத்துவர்களுக்கான தேசிய குழுவின் உறுப்பினர்கள், பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட சுமார் 50 சுதேசிய மருத்துவ பயிற்சியாளர்களின் கூட்டமைப்புடன் நோப்கோவானது ஞாயிற்றுக்கிழமை (5) பிற்பகல் உள்நாட்டு மருந்துகள் மற்றும் நடைமுறைகள் மூலம் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வழிகளைப் பற்றி விவாதித்தது. இதன் விளைவாக சில நோய் தீர்க்கும் முறைகள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளன, மேலும் அந்த மருத்துவ பயிற்சியாளர்களால் முன்னோக்கி நடவடிக்கை எடுக்கப்படுகின்றன, ”என்று லெப்டினன் ஜெனரல் சில்வா கூறினார் Asics footwear | Jordan Shoes Sale UK