05th April 2020 19:43:14 Hours
இராணுவத்தினரினால் நிர்வகிக்கபபட்டுவரும் விடத்தப்பல்லி மற்றும் குண்டசாலே ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 279 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து இன்று காலை (5) அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் காலி,கொழும்பு,கண்டி,மஹியங்கன,கெக்கிராவை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர். Sports Shoes | Nike Shoes