Header

Sri Lanka Army

Defender of the Nation

31st March 2020 14:32:58 Hours

எஸ்எல்எம்ஈ படையினரால் முல்லேரியாவில் உள்ள ஐசியு வாட்டில் வளி அமைப்பு பொருத்தும் செயற்பாடு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க அவர்களினால் இராணுவத் தளபதிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் (SLEME) படையினர் திங்கள்கிழமை (30) பாதுகாப்புத் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் முல்லேரியா வைத்தியசாலை ஐ.சி.யுவில் மருத்துவ வளி அமைப்பை நிறுவ உதவியது.

ஐ.சி.யுவில் இந்த அத்தியாவசிய பாகங்கள் நிறுவப்படுவதால், அவசரகாலத்தில் பயன்படுத்தக்கூடிய 24 படுக்கைகளைக் கொண்ட இந்த பிரிவு சீராக செயல்பட உதவியது என்று வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்து சமரகோன் இந்த பணியை மேற்பார்வையிட்டார். Mysneakers | Air Jordan Release Dates 2020