Header

Sri Lanka Army

Defender of the Nation

30th March 2020 15:29:26 Hours

முப்படையினர்,பொலிஸ்&சிஎஸ்டி ஆகியோர் கிருமி நீக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க தயார்- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (29) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டத்தரணி அஜித் ரோஹன, பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்திற்கான தலைவர் வைத்தியர் பத்மா எஸ்.குணரத்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

பூனானை மற்றும் கல்கந்த ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 77 பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து இன்று காலை (29) அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

"நேற்றிரவு, அகுரனை, தெலம்புகஹவத்தையில் 61 வயதான ஒருவர் கோவிட் -19 தொற்று நோய்க்குள்ளயிருப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் இந்த நபர் கண்டி மற்றும் அகுரனை பகுதிகளில் வெவ்வேறு இடங்களுக்கு அடிக்கடி சென்று வருவது கண்டறியப்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி அகுரனையை தனிமைப்படுத்தவும் முத்திரையிடவும் அரசாங்கம் உத்தரவிட்டது. கூடுதலாக, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புத்தளம், கந்தமங்குளத்தில் உள்ள 59 வயதான ஒரு நபர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் சாஹிரா கல்லூரியை 110 படுக்கைகளுடனான தனிமைப்படுத்தல் மையங்களாக மேம்படுத்திய பின்னர், இந்த நபருடனான தொடர்பு மற்றும் அவர் இருக்கும் இடத்திலுள்ள அனைத்து சந்தேகத்திற்குரிய நபர்களும், இன்று முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளனர், "என்று கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (30) ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன், சமூக இடைவிகளை பராமரிக்கும் அதேவேளை மருத்துவ அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் கடைப்பிடித்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு மக்கள் கண்டிப்பாக வலியுறுத்தப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொது நலனுக்காகவும் மக்களுக்காகவும் செயல்படுத்தப்படுகின்றன ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர் சில பகுதிகளில் முறைகேடாக நடந்து கொண்டதை போன்று வழங்கிய இத்தகைய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல், எந்தவொரு அரச அல்லது தனியார் துறை நிறுவனத்தினர் அவர்களின் இடங்களை அவசரமாக கிருமி நீக்கும் தேவைக்காக முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினரின் ஒத்துழைப்பு தேவைப்பட்டால், அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள் ”என்று லெப்டினன் ஜெனரல் சில்வா தெரிவித்தார்.

பிரதி பாலிஸ்மா அதிபர் அஜித் ரோஹான ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் "2020 மார்ச் 10 ஆம் திகதிக்கு பிறகு எந்தவொரு நாடுகளிலிருந்தும் திரும்பி வந்தவர்கள் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும். அவர்களின் தனிமைப்படுத்தலிற்கான அது பரவுவதை காரணமாக இருந்தது, அவ்வாறு செய்வதைத் தவிர்ப்பவர்கள் மீது நாட்டின் குற்றவியல் சட்டம் மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் .உங்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக, நீங்கள் இப்போது 1933 ஐ அழைக்கலாம் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் பெறலாம். சமூக ஊடக வலயத்தளங்கள் மூலம் போலியான செய்திகளை பரப்புகின்ற அனைவருமே கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படுவார்கள் மற்றும் தனிமைப்படுத்தும் கீழ் உள்ளவர்கள் மருத்துவ வழிகாட்டுதல்களுக்கு அமைய நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , "என்று அவர் கூறினார்.

டொக்டர் பத்மா எஸ். குணரத்ன குறிப்பிடுகையில், "எந்தவொரு வயதினரும் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் நமது மக்கள் தொகையில் 15% ஆக காணப்படுகின்ற பெரியவர்களைப் பராமரிப்பது நமது கடமையாகும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் வெவ்வேறு மாற்றுத்திறனாளிகள் போன்ற தொற்றுநோயற்ற நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் இந்த சிக்கலான தொற்றுநோய்களால் எளிதில் பாதிக்கப்படுவர். எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமையாக இருக்க வேண்டும் என்றும் முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அதேவேளை எல்லா வயதினருடனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார். latest jordans | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth