Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd March 2020 23:51:47 Hours

நாடு பூராகவும் 45 தனிமைபடுத்தல் மருத்துவ பரிசோதனை நிலையங்கள் செயற்படுகின்றன என இராணுவ தளபதி தெரிவிப்பு

தற்போது நாடு முழுவதும் உள்ள 45 தனிமைபடுத்தல் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் 14 நாடுகளை சேர்ந்த 31 வெளிநாட்டவர்கள் உட்பட 3506 பேர்கள் தனிமைப்படுதப்பட்டுள்ளனர் என்று கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியுமான இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் 22 ஆம் திகதி மதியம் இடம் பெற்ற ஊடகவியளார் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை, இராணுவம்,பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மார்ச் 1 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 15,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மாணித்துள்ளனர் இருந்தாலும்கூட அவர்கள் இருக்கும் இடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் திகதி பிற்பகல் நிலவரப்படி மொத்த கோவிட்-19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது, அத்துடன், கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 0600 மணியளவில் நீக்கப்பட்டு மீண்டும் அதே நாள் பிற்பகல் 2.00 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு (24) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அதேபோல் இந்த ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா,புத்தளம்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் (24) ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 6.00 மணியில் நீக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் மறுஅறிவித்தல் வரும்வரை அமுல்படுத்தப்படும்.

அதன்படி,ஊரடங்கு நேரத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தால் வழங்கப்பட்ட அனுமதிகளுடன் உணவு வகைகள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொருளாதார மையங்களுக்கு, கொண்டு செல்லமுடியும்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய தேவைகளை பெற்று கொள்வதற்கு பொதுமக்கள் கடைகள், நிலையங்களுக்கு செல்லும் போது ஒவ்வொறுவரும் 1 மீ இடைவி தூரத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கோவிட் -19 வைரஸ் தொற்று பெரும்பாலும் பெரியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவர்கள் வீடுகளில் இருந்து வெளிப்புற சூழலுக்கு வராமல் இருக்க வேண்டும்.

தற்போது, முல்லேரியாவாவில் உள்ள ஐடிஎச் இல் 74 கொரோனா தொற்று நோயாளர்களும் வெலிகந்தை வைத்தியசாலையில் 7 கொரோனா தொற்று நோயாளர்களும் உள்ளனர்.

சிகிச்சையளிக்கும் மருந்துகளாக குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரைக்கப்படவில்லை மற்றும் வைத்தியர்களின் எந்த பரிந்துரையுமில்லாமல் இந்த மருந்துகளை விற்பனை செய்ய வேண்டாமென மருந்தகங்கள் அறிவுறுத்தப்படுகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் (மார்ச் 21-22) இந்தியாவில் இருந்து வந்த யாத்ரீகர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க மற்றும் பேராதெனிய குழந்தை நரம்பியல் நிபுணர் டொக்டர் அனுருத்த பத்தேனிய ஆகியோர் இதன் தொடர்பான வீடியோ அறிக்கைகளை கீழே காட்டியுள்ளனர். Authentic Nike Sneakers | GOLF NIKE SHOES