Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2020 21:39:25 Hours

கோவிட் – 19 தேசிய நடவடிக்கை தடுப்பு மையத்தில் இடம்பெற்ற முதல் செய்தி மகாநாடு

கோவிட் -19 தேசிய நடவடிக்கை தடுப்பு மையமானது ராஜகிரியிலுள்ள ஜயவர்தனபுர மாவத்தையிலுள்ள சினோ லங்கா டவர்ஸ் கட்டிட தொகுதியில் இலக்கம் 1090 ஸ்தாபிக்கப்பட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களது எண்ணக்கருவிற்கமைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் இம் மாதம் (17) ஆம் திறந்து வைக்கப்பட்டு அன்றைய தினம் 4.30 மணிக்கு ஊடகவியலாளர்களின் செய்தி மகாநாடும் இடம் பெற்றன.

இந்த ஊடக செய்தியாளர் மகாநாட்டில் சுகாதார அமைச்சர் மதிப்புக்குரிய செல்வி பவித்திரா வன்னியாரச்சி , இராணுவ தளபதி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜாசிங்க, பிரதி சுகாதார பணிப்பாளர் டொக்டர் பிரபா பலிஹவடன , பிரதி பொலிஸ் மாஅதிபர் திரு அஜித் ரோஹன, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அவர்களது பங்களிப்புடன் இடம் பெற்றது.

இந்த செய்தியாளர் மனாநாட்டில் புதன்கிழமை (18) நள்ளிரவு முதல், இலங்கைக்கான அனைத்து பயணிகள் வருகையும் 31 மார்ச் 2020 வரை இடைநிறுத்தப்பட உள்ளது, ஆனால் ஏற்றுமதி பொருட்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் கையாளுதல் பாதிக்கப்படாமல் தொடர்ந்து இடம்பெறும். இந்த தேசிய மையம் கொடிய வைரஸ் பரவுவது மற்றும் பிற அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கி வைக்கப்படும் என்றும் COVID-19 இல் தவறான மற்றும் போலி வதந்திகளை பரப்பியவர்கள் மீது வழக்குத் தொடரப்படும், அத்துடன் மேலும் இதுபோன்ற இரண்டு விடயங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன என பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்த 2080 பேர்கள் நாடு முழுவதும் மொத்தம் 16 தனிமைப்படுத்தப்பட்ட செயல்பாட்டு மையங்களில் தற்போது உள்ளதாகவும், COVID-19 வைரஸ் பாதிப்பு மொத்தமாக 43 ஆக உயர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 24 மணிநேர திறந்த தேசிய செயல்பாட்டு மையம், ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் நிறுவப்பட்டது, நாடுமுழுவதும் COVID - 19 தொற்றுநோய்க்கு எதிராக தேவையான அனைத்து தடுப்பு மற்றும் நடவடிக்கைகளையும் கொண்ட மையப்படுத்தவும், விரைவுபடுத்தவும் செயல்படுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், விமான நிலையத்திற்கு வந்திரங்கி தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இருந்து தப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் 1-9 காலகட்டத்தில் இத்தாலியில் இருந்து வந்த அனைவரையும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அழைக்கிறார்கள் அல்லது ஹொட் லைன் 117 அல்லது 1390 ஐ அழுத்தி தொலைப்பேசிகளின் மூலம் தெரிவிக்கலாம்.

செய்தியாளர் மகாநாட்டில் இடம்பெற்ற விவாதங்களை வீடியோ காட்சி மூலம் காணலாம. Mysneakers | Air Jordan