Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2020 19:32:07 Hours

பாதுகாப்பு செயலாளருக்கு கஜபா படையணியில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு

முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பதுகாப்பு செயலாளராக நிமிக்கப்பட்ட கஜபா வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களுக்கு 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாலியபுரையில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி சிவப்பு கம்பள கௌரவ வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. அங்கு வருகை தந்ந பாதுகாப்பு செயலாளரை பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றார் மற்றும் கஜபா படையணியின் படையினர், சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களின் துணைவியர், பாதுகாப்பு செயலகத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் மற்றும் கஜபா படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்திற்கு பங்களிப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அடுத்ததாக மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள், கஜபா படையணியின் சிரேஷ்ட காலாட்படை வீரராகவும் மற்றும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வருகையானது வரலாற்றின் முக்கியத்துவத்துவமான நிகழ்வாகும். இந்த மூவரும் தற்போது நாட்டின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு சூழ்நிலைக்கு தலைமை தாங்குகின்றனர் என்பது இலங்கையின் வரலாற்றில் இணையற்றதாக இருக்கலாம் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் நாட்டின் நிர்வாகத்தின் உச்ச கட்ட பதவியான பாதுகாப்பு செயலாளர் பதவியை அடைந்த மிக மூத்த கஜபா படையணியின் அதிகாரிகளில் ஒருவராக காணப்படுகின்றார்.அவர் கஜபா படையணியின். ஸ்தாபகர் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஜய விமலரத்னவுடன் போர்க்களத்தில் முன்னோடி பாத்திரத்தை வகித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்னவுடன் நெருங்கிய உறவுகள் பற்றிய பல நினைவுகள் உள்ளன. மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் கஜபா படையணியைச் சேர்ந்த இரண்டாவது பாதுகாப்பு செயலாளராகும். ஜனாதிபதி அவர்கள் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் கஜாபா படையணியின் முதல் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.

இப் படைத் தலைமையகத்திற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி நுழைவாயிலில் வைத்து கஜபா படையணியின் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் வரவேற்கப்பட்டார். இவரின் இந்த வருகையின் நினைவாக நா மரக்கன்றையும் நட்டுவைத்தார்.

அதனைத் தொடர்ந்து கஜபா படையணியின் படையினரால் மைதானத்தில் வைத்து கெட்டேரியன் இசைக் குழுவின் தாள மெல்லிசைகளுக்கு மத்தியில் அணிவகுப்புக்கான கட்டளை அதிகாரியுடன் சேர்ந்து, மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. பின்னர் கஜபா படையணியின் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடம் திறந்து வைப்பதற்காகவும் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பின்னர், பாதுகாப்பு செயலாளர், படையணியின் படைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் மூத்த அதிகாரிகள் தங்கள் துணைவியருடன் கஜபா படையணியின் குடும்பங்களின் மாணவர்களுக்கு புலமைபரிசு வழங்க அழைக்கப்பட்டனர்.

அத்துடன் சம்பிரதாய முறைப்படி இடம்பெற்ற மங்கள விளக்கேற்றுதல், இராணுவப் பாடல் மற்றும் கஜபா படையணியின் பாடல், 2 நிமிட மௌன அஞ்சலி ஆகியவற்றைத் தொடர்ந்து இதில் தரம் 5 புலமைபரிசில் சித்தியடைந்த 25 மாணவர்கள் க.பொ.சாதரன தரத்தில் தேர்ச்சி பெற்ற 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 5 மாணவர்கள் கஜபா படையணியின் குடும்பங்களின் விசேட தேவையூடைய மாணவர்கள் 5 இ உட்பட ஆக மொத்தமாக 50 புலமைபரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்த புலமைபரிசில்கள் வழங்கும் நிகழ்வின் போது இராணுவ கஜபா படையணியில் இருந்து ஓய்வுபெற்ற கஜபா படையணியில் முன்னாள் படைத் தளபதி ஜெனரல் (ஓய்வு) சீவாலி வனிகசேகர, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலகத்தின் சேவா வனிதா பிரிவின் திருமதி குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோர்களும் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் உணவு அறையில் அதிகாரிகளுக்கான மதிய உணவு விருந்தோம்பல் இடம்பெற்றதுடன், வரவேற்புக்காக அங்கு வருகை தந்த மூத்த அதிகாரி அனைவருடனும் கலந்துரையாடினார். வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் அதிதிகள் புத்தகத்தில் தனது கருத்துக்களையூம் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Air Jordan Release Dates 2020