Header

Sri Lanka Army

Defender of the Nation

11th March 2020 16:48:15 Hours

விஷேட அதிரடிப்படை கட்டளை தளபதி இராணுவ தளபதியை சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையின் கட்டளை தளபதியான பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக அவர்கள் இம் மாதம் (11) ஆம் திகதி பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது விஷேட அதிரடிப்படை கட்டளை தளபதியை இராணுவ தளபதி வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றார். பின்னர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற எல்.டி.டி.ஈ பயங்கரவாதத்தின் உச்சத்தில் அவர் அர்ப்பணித்த சேவைகளைப் பற்றி இராணுவ தளபதி உரையாடல்களை மேற்கொண்டு இறுதியில் இவர்களது இச்சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவர்களுக்கும் இடையில் நினைவு பரிசுகள் பரிமாறப்பட்டன.

விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த பிரதி பொலிஸ் மாஅதிபரான குணதிலக அவர்கள் 1986 ஆம் ஆண்டு விஷேட அதிரடிப்படையில் உப பரிசோதகராக இணைந்து 25 வருடங்கள் சேவையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff