Header

Sri Lanka Army

Defender of the Nation

28th February 2020 17:20:59 Hours

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் ‘சௌபாக்கியதெக்ம’ வேலைவாய்பு திட்டம்

(ஊடகஅறிவிப்பு)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ‘சௌபாக்கியதெக்ம’ எனும் திட்டத்திற்கமைய பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் ஆலோசனைக்கமைய இராணுவத்தினர் நாடலாவிய ரீதியில் நடைப்பெற்று வறும் நேர்முக தேர்விற்கு மாவட்டம்/பிரதேச செயலாக உத்தியோகத்தர்களுடன் இணைந்து தங்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். மேலும் இந்த தேர்வில் நாடு முழுதும் உள்ள குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களில் இருந்து 100,000 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள 304 மாவட்ட / பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இடம் பெறுவதுடன், நேர்முக தேர்வானது புதன்கிழமை (26) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு சனிக்கிழமை (29) ஆம் திகதி வரை நடைப்பெறும். அதனடிப்படையில் அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலக பலநோக்கு அபிவிருத்தி துறையின் அறிவுறுத்தலின் பேரில் நடைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அதன்படி இந்த நேர்காணல் தேர்வானது அந்தந்த செயலகத்தில் உள்ள சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி அலுவலகத்தின் பாதுகாப்பு பதவி நிலை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி செனவிரத்ன அவர்களால் அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்பட்டு வருகின்றன.

அதற்கமைய வியாழக்கிழமை (27) ஆம் திகதி மாலை வரையில் 1085 தேர்வுகள் இடம் பெற்று வருகின்றன. இதில் யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி முல்லைத்தீவு, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகங்களின் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகளின் தலைமையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் 26,27 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நேர்முக தேர்வில் 114,421 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டன.

இந்த விண்ணப்பத்தில் 18 முதல் 45 வயதிற்கு இடைப் பெற்ற 9 வருட கல்வி தகைமையுடைய (தரம் 8) குறித்த விண்ணப்ப தாரிகள் பல பிரிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. இதில் எவரும் அரசதொழில் இல்லாத குடும்பம், சமூர்தி சலுகைகளைப் பெறாதவர்கள், வயது வந்த பிள்ளைகள் உடைய விதவை குடும்பம், அங்கவீனமுற்ற குடும்பம், நிறந்தர நோயுள்ள குடும்பம், மாத வருமானம் 5000 / = க்கும் குறைவான குடும்பங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அதிமேதகு ஜனாதிபதியினால் ஏட்படுத்தப்பட்ட இந்த திட்டமானது ஜனாதிபதி பலநோக்கு அபிவிருத்தி துறையானது சமூகத்தில் வருமான மற்று கஸ்டத்தில் வாழும் மக்களின் நலன் கருதி கிராம சேவை பிரவின் ஊடாக நடைப் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடாலாவிய ரீதியில் (பெப்ரவரி 26-27) ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நேர்முகதேர்வில் 552,228 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். (முடிவு) buy footwear | UOMO, SCARPE