Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2020 18:34:10 Hours

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நாடாளாவியரீதியாக நெல் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி இம் மாதம் (27) ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வரை 10,244,690 கிலோ கிராம் நெல், ரூபா .512,234,500.00 பெறுமதிக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் ‘கீரி சம்பா’, ‘சிவப்பு நாடு’,வெள்ளை நாடு’ மற்றும் ‘சிவப்பு பெரிய நாடு’ ஆகிய வகைகளைச் சேர்ந்த நெல்லானது நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகங்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுன் கீழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையங்களில் பணிப்புரியும் படையினர்களின் ஒத்துழைப்போடு, பருவ காலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லானது ,நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலகங்களின் ஊடாக கொள்வனவு செய்யபடுகின்றன.

அமைச்சரவை அங்கிகாரத்தின் பின்னர், விவசாயிகளின் நலன் கருதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், விவசாயிகளிடமிருந்து நெல்லினை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்தார்..

அதற்கமைய பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், யாழ்பாணம், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஒத்துழைப்பினை குறித்த அதிகார சபையிடம் இணைந்து வழங்குவதற்கு பிரிகேடியர் ஐ.பி. கந்தனராச்சி அவர்களை பொறுப்பாக நியமித்தார். jordan Sneakers | Zapatillas de running Nike - Mujer