Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2020 17:33:25 Hours

விசேட படையணியின் 23ஆவது ஆண்டு விழா நிகழ்வு

ஜனாதிபதி ரண பரசூர மற்றும் படைத் தலைமையக ரண பரசூர போன்ற கௌரவ விருதுகளைப் பெற்ற படையணியான இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் 23ஆவது ஆண்டு விழாவானது 17ஆம் திகதி நாவுலவில் உள்ள இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு விசேட படையணி பிரிவின் தளபதியும் பதில் பாதுகாப்பு பிரதானியுமான இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இப் படையணியின் விசேட அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவியான சுஜீவா நெல்சன் அவர்களும் கலந்து கொண்டதுடன் இவர்கள் இப் படையணித் தலைமையக தளபதியான பிரிகேடியர் நிஷ்ஷங்க ஈரியகம அவர்களால் வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் 222 படையினர்களைக் கொண்ட படையினர் குழுவால் ஜனாதிபதி ரணசூர மற்றும் படைத் தலைமையக ரணசூர போன்ற விசேட அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் போன்றன பிரதம அதிதியவர்களை கௌரவப்படுத்தி வரவேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பதில் பாதுகாப்பு பிரதானியுமான இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 'வெற்றியுடன் இலங்கை நோக்கி' எனும் இப் படைப் பிரிவின் எண்ணக் கருவிற்கமைய இப் படையினர் செயற்படல் வேண்டுமெனவும் அதன் காரணமாகவே இப் படையணியானது 23ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றதெனவும் அதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். மேலும் இப் படைத் தலைமையகமானது 4படைப் பிரிவுகளையும் பயிற்சிப் பா டசாலைகள் இரண்டையும் விசேட படையணி மற்றும் தலைமை படைப் பிரிவு போன்றவற்றையும் கொண்டுள்ளதுடன் மேலும் மொத்தமாக நான்காயிரம் படையினரை இப் படைத் தலைமையம் கொண்டுள்ளது.

அந்த வகையில் பதில் பாதுகாப்பு பிரதானியுமான இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தமது இராணுவ சேவைக்காலத்தில் விசேட படையினருடன் சேவையாற்றிய அனுபவங்கள் தொடர்பாகவும் பகிரிந்து கொண்டார்.

அந்த வகையில் காயமடைந்த மற்றும் உயிர் நீத்த படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் போன்றோரை நினைவு கூர்ந்ததோடு வீடு நிர்மானப் பணிகள் புலமைப் பரிசில் திட்டங்கள் போன்ற பல நலன்புரி சேவைகள் இப் படையினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிற்கான மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ் ஆண்டு நிகழ்வில் விசேட படையணித் தலைமையக தளபதி மற்றும் நடவடிக்கை பணிப்பாளரான பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க அத்துடன் இப் படைப் பிரிவின் அதிகாரியான பிரிகேடியர் டீ ஜி எஸ் செனரத் யாபா மற்றும் பல உயர் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.Sport media | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD