Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2019 15:49:36 Hours

22 ஆவது பரா மெய்வல்லுனர் - 2019 நிறைவு விழா

இலங்கை இராணுவத்தின் 22 ஆவது பரா மெய்வல்லுனர் போட்டிகளின் நிறைவு நிகழ்வானது இம் மாதம் (29) ஆம் திகதி கொழும்பு சுகததாஸ மைதானத்தில் கோலாகாலமாக இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பையேற்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு K.D.S ருவன்சந்திர அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இவரை இராணுவ தளபதியும் , பிரதி பதவிநிலை பிரதானியும் பரா மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் நிர்மல் தரமரத்ன அவர்கள் வரவேற்றனர். இந்த பரா மெய்வல்லுனர் போட்டிகள் இம் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் சக்கர நாற்காலி கூடை பந்து, பூப்பந்து, சைக்கிள் ஓட்டம், சக்கர நாற்காலி மரதன், வில்வித்தை, பாரம் தூக்குதல், கரப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம், மேசைப் பந்து , கிரிக்கெட், நீச்சல், சக்கர நாற்காலி டென்னிஸ், ஏர் ரைபிள் ஷூட்டிங் மற்றும் தடகள விளையாட்டுகள் இடம்பெற்றன.

பராமெய்வல்லுனர் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இலேசாயுத காலாட் படையணியானது முதலாவது இடத்தையும் , கஜபா படையணி இரண்டாவது இடத்தையும், விஜயபாகு காலாட் படையணி மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது. இந்த மெய்வல்லுனர் போட்டிகள் டயலொக் எக்‌ஷியடா நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றன.

ஆண்டின் சிறந்த தடகள கோப்பையை கமாண்டோ படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சி.என்.பி இந்திரபால அவர்களும் சிறந்த தடகள வீரராக இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த எம்.வி.டி தனஞ்சய அவர்கள் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2019 ஆம் ஆண்டிற்கான இந்த போட்டியில் பதக்கங்களை பெற்றவர்களது விபரங்கள் கீழ்வருமாறு. bridgemedia | Sneakers