Header

Sri Lanka Army

Defender of the Nation

29th December 2019 11:57:59 Hours

இராணுவ தளபதியின் முன்முயற்சியுடன் நாடு முழுவதும் உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை

இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடு முழுவதும் உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமானது பெருநிறுவன சமுக பொறுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் தொடர்பு கொண்டு தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு திட்டத்தினர் கடந்த (29) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2300 க்கும் மேற்பட்ட படையினர்களுடன் நாடு முழுவதும் உள்ள தொண்டர்களுடன் அரச ஊழியர்களும் இணைந்து இந்த திட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் இரண்டு மகள்கள், உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் இந்த மெகா திட்டத்தை நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளிலும் முத்துவில் முகத்துவாரத்தில் உள்ள காக்கை தீவில் கடற்கரையில் தொடங்கின.

இராணுவ தளபதி அவர்கள் அந்த மாசடைந்த கடற்கரை பகுதிக்கு கையுறைகள் அணிந்து வருகை தந்ததுடன் மேற்கு மாகாணத்தில் மெகா தூய்மைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அவர் அளித்த கருத்துக்களில், இராணுவ தளபதி தெரிவித்துக் கொண்டதாவது கலனி ஆற்றின் கரையோரத்தில் வாழும் பொது மக்களை பிளாஸ்டிக் பாட்டில்கள், நச்சு தன்மையுடைய இயற்கையின் சிதைவடையாத மாசுபடுத்திகள் போன்றவற்றை போடாமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த கழிவுகள் மோதர கரையோரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. என்பதையும் தளபதி விபரமாக எடுத்து கூரினார்.

தளபதியின் மகள்களில் ஒருவரான ஒஸ்ரேலியாவைச் சேர்ந்தவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை உறுதிப்படுத்தியுள்ள தகவலில் இலங்கையில் நதி நீரில் பொதுமக்களால் விசப்படுகின்ற, பிளாஸ்டிக் மாசுபடுத்திகள், சிறிய கடல் நீரில் சேர்ந்து மக்களால் நுகரப்படும் சிறிய கடல் நீர் மீன்களில் கலந்து மாசுபடுதல் மூலம் நச்சுப் பொருளாகி புற்றுநோய் ஏற்பட வாய்புள்ளது என்பதை அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துக்கொண்டார்.

14 ஆவது பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர்களால் கொழும்பை உள்ளடக்கிய மேற்கு, நீர் கொழும்பு, மாத்தறை தொடக்கம் புத்தளம் வரையிலான கடலோரப் பகுதியிலுள்ள காலி மற்றும் பல முக்கிய கடற்கரைப் பகுதிகள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று துப்புரவுத் திட்டத்தைத் மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே, பிரதி சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி, இராணுவ பொது நிர்வாக பிரதாணி மேஜர் ஜெனரல் சுராஜ் பன்சஜய, 58 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எல்.பி.டபிள்யூ பெரேரா உட்பட பல நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இந்த மெகா சமூக திட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் இத் திட்டம் நாட்டின் மாசுபாட்டின் அதிகரிப்பை தடுத்து சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் வழக்கமான அடிப்படையில் அந்தந்த பிரதேசங்களில் தொடரும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

மேலும் இந்த நிகழ்வில் சிவில் அங்கத்தவர்கள் மற்றும் தொண்டர்களும், இராணுவ படையினர்களுடன் இணைந்து இந்த திட்டத்தில் பங்குபற்றினர். Running sneakers | Footwear