Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2019 11:34:50 Hours

வன்னி பாதுகாப்பு படையினரால் புதிய வீடு நிர்மாணிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் சமூக சார்ந்த சேவைகளை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் தந்திரிமலை ரன்பத்விலா பிரதேசத்தில் புதிய வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 13 ஆவது புதிய வீடு கடந்த (19) ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய 212 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேணல் அனில் பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 5ஆவது இராணுவ தேசிய பாதுகாப்பு படையினர்களால் இந்த வீட்டின் நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 21 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரன அவர்களால் இந்த வீடு மேற்பார்வை செய்யப்பட்டு, பயனாளிகளான திரு அஜந்தா விக்ரமராச்சி மற்றும் அவரது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

திரு அஜந்தா விக்ரமராச்சி தனது மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதை கவனத்திற்க கொண்ட படையினர் அவர்கள் தங்குவதற்கு தங்குமிட வசதி இல்லாமல் பல கஷ்டங்களை அனுபவித்து வருவதை கருத்திற்கொண்டு இந்த திட்டத்தை மேற்கொண்டனர். அதற்கமைய, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நன்கொடையாளரான திரு தமித் கஹாவே அவர்களால் இக் குடும்பத்திற்கு புதிய வீட்டைக் நிர்மாணித்து கொடுப்பதற்றகாக தனது தாராளமான மனதுடன் நிதியுதவி வழங்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டில், வரவேற்பு பகுதி, சாப்பாட்டு அறை, படுக்கையறைகள் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் உட்பட ரூபா. 100,000.00 அவர்களும் பரிசாக வழங்கப்பட்டனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு பெறுமதியான நவீன மின்சார குழாய் கிணறும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரான அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் வீட்டை திறந்துவைத்து திறப்பினை வழங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் 212 ஆவது படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், 5 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள பல நலம் விரும்பிகள் ஆகியோர் பங்கேற்றனர். Sneakers Store | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes