Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2019 21:38:38 Hours

காந்தி பூங்காவில் இடம்பெற்ற நத்தார் கரோல் நிகழ்வுகள்

கிழக்கு பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட 2019-கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வுகளானது மட்டக்களப்பில் அமைந்துள்ள காந்தி பூங்காவில் வியாழக் கிழமை 19ஆம் திகதி இடம்பெற்றது.பெரும் திரலான மக்கள் பங்குபற்றிய இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி.ஜோசப் பொன்னய்யா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெனாண்டோ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஆலோசனைக்கமைய 231ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 23ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ சங்கத்தினால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

இந்த மாலை இனிய நிகழ்வுகளானது தேசியக் கீதம் பாடல் மற்றும் மக்களின் மனதை கவரும் வகையிலான வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

இப் புனித நிகழ்வானது சம்பிரதாய மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டதோடு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி.ஜோசப் பொன்னய்யா அவர்களினால் கிறிஸ்மஸ் நத்தார் உரையாற்றப்பட்டது.

புனித மெதடிஸ் தேவாலயம், அக்கரைப்பத்து பாரிஸ் தேவாலயம், நாவற்குடா பாரிஸ் தேவாலயம், அம்பாறை பாரிஸ் தேவாலயம்,மட்டக்களப்பு அமேரிக்க மிஷன் தேவாலயம்,புனித மைக்கல் கல்லூரி மாணவர்கள்,இராணுவம் ஆகிய நிறுவனங்களிலுள்ள பாடகர் குழுவினால் இயேசுவின் பிறப்பை நினைவு படுத்தி கரோல் பாடல் பாடப்பட்டதுடன் ஏனைய கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிழக்கு பாதுகாப்பு படையின் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெனாண்டோ அவர்கள் தனது உரையின் போது கிறிஸ்மஸ் தினமானது மக்களிடையே சமாதானம் ,ஆத்மீக செயற்பாடு போன்றவைகளை வெளிப்படுத்தும் கிறிஸ்தவத்தின் ஒரு நிகழ்வாகும் என தெரிவித்து தன்னுடைய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பிள்ளைகளுக்கான பரிசுப்பொதிகள் மற்றும் தேவையுடைய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் உள்ளிட்டன வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது கிறிஸ்மஸ் மர அலங்கரிப்பு மற்றும் வேறு அலங்கரிப்பு முறைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டன. இறுத்தியாக இந்நிகழ்வானது ஆயர் மற்றும் 231 படைத் தலைமையகத்தின் சார்பாக பங்குபற்றியவர்களின் சம்பிரதாய இரவு விருந்தோம்லினை தொடர்ந்து நிறைவுபெற்றன.

புத்த சமய, இந்து சமய, மற்றும் இஸ்லாமிய மத பிரமுகர்கள்,22ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அத்துல மாரசிங்க, 24ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே, 23ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசுந்தர, விமானப் படை, கடற் படை மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | Men's Sneakers