Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2019 14:28:08 Hours

நெலும் பொக்குணவில் இடம்பெற்ற இராணுவ கிறிஸ்மஸ் கரோல்ஸ் நிகழ்வுகள்

உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படும் நத்தார் தினபண்டிகை நிகழ்வை முன்னிட்டு ஆண்டுதோறும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடாத்தும் இசை மற்றும் மெல்லிசை உள்ளடங்கிய கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வானது, செவ்வாய்க்கிழமை 10ஆம் திகதி மாலை, புகழ்பெற்ற பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ திரை அரங்கில் இடம்பெற்றது.

கௌரவ விருந்தினராக கொழும்பின் பேராயர் கலாநிதி மல்கம் ரஞ்சித் அவர்கள் கலந்துகொண்டதுடன் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார். இராணுவ பாடகர், பாடசாலை பாடகர்கள் மற்றும் தனியார் பாடகர்கள் மற்றும் பிரபல பாடகர்கள் உட்பட பலர் இவ் இசை மற்றும் மெல்லிசை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த கொழும்பு பேராயர், இராணுவத் தளபதி மற்றும் அவரது பாரியாரான இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் ஆகியோர் இராணுவ கிறிஸ்டியன் சங்கத்தினால் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

இராணுவ சேப்லைன் ஆயர் பெனடிக்ட் ஜோசப் அவர்களின் ஆரம்ப மத பிராத்தனையினை தொடர்ந்து இராணுவ கிறிஸ்டியன் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜெயசாந்த கமகே அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட கலாநிதி மல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் வேத பாடவாசிப்பு மற்றும் நத்தார் தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்தனை ஆராதனையை மேற்கொண்டார்.

சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்ட பிரபலமான கிறிஸ்மஸ் மெலடிகளான 'சீனு ஹேண்டின்', 'உலகிற்கு மகிழ்ச்சி', 'பினி முவான் ஹிமா உதின்', 'நமோ மரியானி', 'மன்னரின் பிறந்த நாள்', 'பினி போடா ஆசிரி', 'த லிட்டில் டிரம்மர் போய்', 'புலுன் வைஜ் சுடு', 'பெத் லெஹெம்பூர்', 'ஹோலி நைட்', 'சைலண்ட் நைட்' போன்ற வாத்திய இசைகள் இந்நிகழ்வின் போது இயற்றப்பட்டன.

கோரின் அல்மெய்டா, டம்மிகா வால்போலா, மரியாசெல்லே கூனாதிலகே, டி லானெரோல் சகோதரர்கள், அனில் பாரதி, எஷாந்தா டி ஆண்ட்ராடோ மற்றும் பல இராணுவ பாடகர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற பாடகர்கள் புகழ்பெற்ற பார்வையாளர்களுக்கு மத்தியில் அமைதியின் இளவரசர் இயேசு கிறிஸ்துவுக்கு துயில் பாடல்களைப் பாடினர்.

இராணுவ படை வீர்ர்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் கொண்டாடப்படும் இராணுவத்தின் கிறிஸ்மஸ் கரோல்ஸ் நிகழ்வுகளானது இராணுவ நாட்காட்டியில் காணப்படும் ஒரு வருடாந்த முக்கியமான நிகழ்வாகும்.

அதேசமயம் கொழும்பு பேராயர் கலாநிதி மல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் இராணுவத்தின் சார்பாக இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

திருமதி சுஜீவா நெல்சன், முன்னாள் இராணுவ தளபதிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள்,பேராயர், எண்டெரமுல்ல புனித ஜோசப் கல்லூரி, நல்ல ஷெப்பர்ட்ஸ் கான்வென்ட், டி மசெனோட் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பாடகர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். jordan Sneakers | Nike Shoes