04th December 2019 13:53:04 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியவர்களின் ஆசீர்வாதத்துடன் 24ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்தின் 6ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இப் படைத் தலைமையகத்தில் பாரிய அளவிலான இரத்ததான நிகழ்வானது வெள்ளிக் கிழமை (08) மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இவ் இரத்ததான முகாமானது அம்பாரை வைத்தியாசலையின் பங்களிப்போடு இடம் பெற்றது. இந் நிகழ்வில் 250 அதிகாரிகள் மற்றும் படையினர் குருதி வழங்கினர்
அதனைத் தொடர்ந்து இந்து வழிபாட்டு நிகழ்வுகள் மல்வத்தை பிள்ளையார் கோவில் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகள் மல்வத்தை மஜிதுரம் ஜூம்மா பள்ளிவாசலில் அத்துடன் கத்தோலிக்க வழிபாடுகள் அம்பாறை புனித இக்னேசியஸ் ஆலயத்தில் இடம் பெற்றது.
மேலும் அம்பாரை பிரதேசத்தில் மகா சங்கத்தின் 60 உறுப்பினர்களுக்கு அன்னதானம் வெள்ளிக் கிழமை (22) வழங்கப்பட்டது.
அத்துடன் புதன் கிழமை (27) மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வானது 23ஆவது இலங்கை சிங்கப் படையினரால் வழங்கப்பட்டது. மேலும் படையினருடனான மதிய உணவு விருந்துபசார நிகழ்வும் இடம் பெற்றது. short url link | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov