Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2019 19:32:58 Hours

ஜூனியர்களுக்கான தேசிய வலைபந்து சம்பியன்ஷிப் 2019 க்கான போட்டியை இராணுவத் தளபதி ஆரம்பித்து வைப்பு

நடைப்பெற இருக்கும் ஜூனியர்களுக்கான மெகா தேசிய வலைபந்து சம்பியன்ஷிப் 2019 க்கான போட்டியானது டிசம்பர் 14- 15 ஆம் திகதி அனுராதபுர பொது மைதானத்தில் நடைப் பெற இருப்பதால், 2019 நவம்பர் (30) ஆம் திகதி கொழும்பு விளையாட்டு அமைச்சின் டொரிங்டன் மைதானத்தில் வைத்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு டயலொக் ஆக்ஸியாட பி.எல்.சி. ஆரம்பித்து வைத்தார்.

நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஜூனியர் போட்டியானது 21 வயதிற்குட்பட்ட திறமையான வலைபந்து வீரர்களை எதிர்காலத்தில் தேசிய அணிக்கு தெரிவு செய்து சிறந்த வீரர்களைத் தேர்ந்தொடுப்பது நோக்கமாகக் கொண்டுள்ளது. இப் போட்டியானது இலங்கை வலைபந்து கூட்டமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி இப் போட்டி டிசம்பர் 7 ஆம் திகதி வரை தொடரும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இப் போட்டியின் முதல் சுற்று துவங்குவதற்கு முன்பு இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதான அதிதியை ஜூனியர் வீரர்களால் வரவேற்கப்பட்டதுடன், அதிதிகள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் போட்டி ஆரம்பமானது. போட்டியின் ஆரம்ப சுற்றில் 20 நிமிடங்களுடன் லீக் கட்டமைப்பில், இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 36 அணிகளையும் 16 ஆகக் குறைத்து பின்னர் இரண்டு சுற்றில் முதல் போட்டிகள் நாக் அவுட்டில் நடைபெறும் அடிப்படையில் மூன்றாம் இடத்துக்கான போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் ஒரு விளையாட்டுக்கு 40 நிமிடங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இலங்கை வலைபந்து சம்மேளனத்தின் தலைவி திருமதி லட்சுமி விக்டோரியா அவர்கள் வலைபந்து வீரர்களுடன் பயிற்சியாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் அன்றைய பிரதம அதிதியை அன்புடன் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி தனது சுருக்கமான வாழ்த்து உரையில், நாடு முழுவதிலுமிருந்து வலைபந்து வீரர்கள் தேசிய பூல் போட்டியில் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் இந்த போட்டிகளில் தங்கள் திறமைகளையும் திறமையையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு உள்ளது என்றும், அத்துடன் 2019 ஆம் ஆண்டிலும், தொடரும் ஆண்டிலும் அவர்களின் ஆதரவு தேவை என்பதை தெரிவத்துக்கொண்டு டயலொக் ஆக்சியாடவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவிக்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறினார். அத்துடன் பெருநிறுவன வலைப்பந்து கூட்டமைப்பை ஆதரிப்பது இந்த அளவிலான போட்டிகளை நடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அன்றைய பிரதம விருந்தினர் அனைத்து போட்டியாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். Sportswear free shipping | Womens Shoes Footwear & Shoes Online