Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2019 21:00:20 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் படைத் தலைமையகங்களுக்கான விஜயம்

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியாக தனது கடமையைப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் புதன் கிழமை 27ஆம் திகதி 144ஆவது படைத் தலைமையகம் மற்றும் 11ஆவது விஜயபாகு காலாட் படைத் தலைமையகங்களுக்கான தனது உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டார்.

மேலும், 144ஆவது படைத் தலைமையகத்திற்கான விஜயத்தின் போது மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களை படைத் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் ஏ.சி லமாஹேவா அர்கள் வரவேற்றதுடன் தனது படைத் தலைமையகத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக மேற்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு விளக்கமளித்தார். மேலும் 11ஆவது விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள், 11ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் இராணுவ மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர், அவர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உப மின் ஆலை, ஒருகொடவத்த எண்ணெய் நிறுவல் நிலையம், மற்றும் கெலனிதிஸ்ஸ மின் நிலையம் ஆகிய இடங்களை பார்வையிட்டதோடு, அங்குள்ள பாதுகாப்பு ஒழுங்குகளையும் பரீட்ச்;சித்தார். Best Sneakers | Nike Air Max 270