Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2019 21:12:20 Hours

பொறியியல் படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற இராணுவ நினைவு தின நிகழ்வு

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பொறியியல் படையணியின் இராணுவ வீரர்களது நினைவு தின நிகழ்வானது பனாகொடையிலுள்ள பொறியியல் படையணி தலைமையகத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது தலைமையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

நிகழ்வில் முதல் அங்கமாக உயிர் நீத்த படையினர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தி பின்னர் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு ‘ரன பெர’ வாதங்களுடன் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றன.

மேலும் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் ‘சங்கீக தான’ நிகழ்வுகளும் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Sportswear free shipping | Air Jordan