25th November 2019 14:22:27 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் தமது கடமைப் பொறுப்பை மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக ஏற்றார்.
அதற்கமைய இவ் அதிகாரியவர்கள் ஜயஸ்ரீ மஹா போதிக்கான விஜயத்தை மேற்கொண்டு மகா சங்கத்தினரை மற்றும் அட்டமஸ்தானாதிபதி (எட்டு இடங்களில் வழிபாடு) ருவன்வெலி மகா சேய மிரிசாவெடிட்டிய அபயகிரிய ம்றறம் ஜயந்தி விகாரை போன்ற விகாரைகளுக்கான வழிபாட்டை வியாழக் கிழமை (21) மேற்கொண்டார்.
அந்த வகையில் 21ஆவது படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இப் புதிய தளபதியவர்கள் இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் இப் படைத் தலைமையக படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளும்ட இடம் பெற்றன.
மேலும் இவ் 21ஆவது படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் இப் படைத் தலைமையகத்தில் மா மரக் கன்றை நட்டார். இதன் போது இப் புதிய தளபதியவர்களு;ககு 21ஆவது படைத் தலைமையக நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் சதஹிரு சேய (தூபி) வின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதுடன் வரலாற்று சிறப்பு மிக்க தாந்தா மலை ரஜ மஹா விஹாரைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் 7ஆவது இலங்கை பீரங்கிப் படைப் பிரிவிற்கு சென்றதுடன் இதன் போது இப் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களால் வரவேற்கப்பட்டார். இதன் போது இப் படைப் பிரிவின் சேவைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விளக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் 7ஆவது இலங்கை தேசிய படையணி நபடகஸ்வௌவில் உள்ள 3ஆவது கள பிரிவில் உள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணி மற்றும் மதவச்சியில் உள்ள படையணி போன்றவற்றிற்கான விஜயத்தை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தளபதியவர்கள் 213ஆவது படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி மேற்கொண்டார். இதன் போது வருகை தந்த தளபதியவர்கள் 213ஆவது படைத் தலைமையக தளபதியான கேர்ணல் கே ஏ என் ரசிக் குமார அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் இப் படை வளாகத்தில் மர நடுகையை இப் புதிய தளபதியவர்கள் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இப் புதிய தளபதியவர்கள் 213ஆவது படைப் பிரிவின் மற்றும் 5ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணி போன்றவற்றின் துப்பாக்கி ரவை பிரிவு போன்றவற்றின் பாதுகாப்பு முறை தொடர்பாக கண்காணித்தார். இதன் போது இப் புதிய தளபதியவர்களின் 2ஆவது போர்கருவிப் படைக்கல சிறப்பணியின் விடுமுறை விடுதிக்கான விஜயத்திற்கு முன்னர் இப் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களால் விளக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 21ஆவது படைப் பிரிவின் உயர் அதிகாரிகள் படையினர் போன்ற பலர் கலந்து கொண்டனர். Sports Shoes | Nike Shoes, Sneakers & Accessories