Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2019 14:00:27 Hours

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உடலுபொல அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

இலங்கை நிரந்தரப் படையணியில் கிட்டத் தட்ட 34வருடங்களிற்கு மேல் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் கபில பண்டார உடலுபொல அவர்களின் இராணுவ சேவை ஓய்வை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வானது சிங்கப் படையணித் தலைமையகத்தில் இவ் அதிகாரிகள் மற்றும் படையினரின் பங்களிப்போடு வெள்ளிக் கிழமை (22) இடம் பெற்றது.

இதன் போது இலங்கை சிங்கப் படையணித் தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் மேஜர் ஜெனரல் கபில பண்டார உடலுபொல அவர்களுக்கு இராணுவ விதிமுறைகளுக்கமைவாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் உயிர் நீத்த படையினருக்கான மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றதோடு அதனைத் தொடர்ந்து ஆணைச் சீட்டு அதிகாரிகள் போன்றோரால் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடந்து இராப்போசன விருந்துபசார நிகழ்வுகள் இலங்கை சிங்கப் படைத் தலைமையக அதிகாரிகளால் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் கபில பண்டார உடலுபொல அவர்கள் தமக்கு இராணுவ சேவையின் போது ஒத்துழைப்பை வழங்கிய அதிகாரிகள் மற்றும் படையினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இப் பிரியாவிடை நிகழ்வில் உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் இவ் அதிகாரியவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் போன்றோர் கலந்து கொண்டனர். Nike footwear | balerínky