25th November 2019 14:10:27 Hours
கனத்த மழை காரணமாக ஏற்படும் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் முகமாக, 66ஆவது படைப் பிரிவின் படையினரால் பரந்தன் உமயாலபுரத்திலுள்ள கனிஷ்;ட பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு விழிப்புணர்வு நிகழ்வானது 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது, 662ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியினால் மேற்பார்வை செய்யப்பட்டது.
மேலும், 66ஆவது படைப் பிரிவின் 10 படை வீரர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் இவ் டெங்கு விழிப்புணர்வு விரிவுரையில் கலந்து கொண்டதுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இந் நிகழ்வை நடாத்த தங்களது பங்களிப்பினை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.jordan Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov