25th November 2019 18:12:20 Hours
சாவகச்சேரியிலுள்ள மாதயுவில் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக, 52ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 523ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது இடம் பெற்றது.
மேலும், மகாவெளி அதிகார சபையின் முன்னாள் மனிதவள அபிவருத்தி நிலையத்தின் தலைவி திருமதி இராங்கனி பீரிஸ் மற்றும் அவருடைய சகாக்களின் நிதியுதவியுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் 152 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அதேவேலை 52ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.எஸ் வடுகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, 523ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி, 4ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கே.டி.டி.எஸ் கலன்சூரிய ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் 523ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் 4ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ்வன்பளிப்பின் மொத்தப் பெறுமதி ரூபா.325000 ஆகும்.
52ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.எஸ் வடுகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் 523ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி ஆர்.பி.ஏ.ஆர்.பி ராஜபக்ஷ, 4ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சில அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.jordan Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta