25th November 2019 17:22:27 Hours
66ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் ஏற்பாட்டில்,கடந்த 22ஆம் திகதி 2ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சாதாரண படை வீரர் ஆர்.டபல்யு.வி பியதிஸ்ஸ மற்றும் கடற் படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சீப் பெட்டி ஒபிஷர் ஆகிய இருவரும் இணைந்து யாழ் நாகதீபம் கோவிலில் இருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையினை ஆரம்பித்து 24ஆம் திகதி அமூக வரவேற்புக்கு மத்தியில் ஆனையிறவை வந்தடைந்தனர்.
தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களது அவயங்களை இழந்த படை வீரர்களின் மத்தியில் தார்மீக நடத்தை,தைரியம், துணிவு போன்றவைகளை வெளிப்படுத்து முகமாக இடம்பெற்ற இப் பயணமானது இராணுவத் தளபதி மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி ஆகியோரின் ஆசிர்வாத்த்தை பெற்றது.
மேலும்,ஆனையிறவை வந்தடைந்த இவர்களை படையினர் வரவேற்றதோடு, அவர்களுக்கான உணவு மற்றும் சிற்றூண்டி வசதிகளையும் ஏற்பாடு செய்தனர்.அங்கு வருகை தந்த இருவரும் ஆனையிறவு ஹசலக காமினி நினைவு தூபிக்கு மரியாதை செலுத்தினர். மேலும் அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.Nike air jordan Sneakers | Men Nike Footwear