25th November 2019 11:22:27 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக வேலைத் திட்டத்தின்னூடாக 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் 224 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால், க. பொ.த. சாதாரண தரப் பரீட்சையினை முன்னிட்டு பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கானது புதன் கிழமை 20ஆம் திகதி மூதூரில் உள்ள பேர்ல் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.
மேலும், 22ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன எதிரிவீர அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, 224ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரதம அதிதியாக இக்கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இடம்பெற்ற மங்கள விளக்கேற்றலினைத் தொடரந்து மகளிர் பரீட்சார்த்தியினால் வரவேற்புரையளிக்கப்பட்டதோடு, குறித்த மாணவ சமூகத்தினரின் அறிவு மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட இராணுவத்தினரின் முயற்சிக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார்.
மேலும், பிரபல கணித விரிவுரையாளரான திரு என் விபுலாநந்த அவர்களினால் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் சுமார் 500 இற்கும் அதிகமான பரீட்சார்திகள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கொட்டிஆராம முலமஹா விஹாரையின் சங்கைமிக்க தேரர், சாம்பூர் கோவில் குருக்கள், கிறிஸ்தவ தேவாலயத்தின் மத போதகர், மௌலவிகள், 224ஆவது காலாட் படையணின் சிரேஷ்ட அதிகாரிகள் , 15ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி , மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர், மூதூர் கிரிகெட் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் மூதூர் வர்தக சங்க தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Sportswear free shipping | 『アディダス』に分類された記事一覧