22nd November 2019 14:27:55 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62, 621 ஆவது படைப் பிரிவுத் தலைமையகளின் பூரன ஒத்துழைப்புடன் கெப்பிடிகொலாவ ஹேரத் ஹல்மில்லாவ வித்தியாலயத்தைச் சேர்ந்த பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு இம் மாதம் (22) ஆம் திகதி பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
நன்கொடையாளியான திருமதி மாலி பெரேரா அவர்களது நிதி அனுசரனை உதவியுடன் 23 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. தரம் 1-5 ஐந்து வகுப்புக்களைக் கொண்ட தரத்திலுள்ள மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த முன்பள்ளியில் 17 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் கெபிடிகொலாவ கல்வி வலையத்தின் பணிப்பாளர், 17 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | jordan Release Dates