22nd November 2019 14:25:55 Hours
இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியில் மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்ட உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட மற்றும் மேஜர் ஜெனரல் A.S ஹேவாவிதாரன அவர்களுக்கு பனாகொடையிலுள்ள பீரங்கிப் படைத் தலைமையகத்தில் இம் மாதம் (21) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.
பதவியுயர்த்தப்பட்ட இந்த உயரதிகாரிகள் பீரங்கிப் படைத் தலைமையத்தில் வைத்து மத்திய கட்டளை தளபதி அவர்களினால் வரவேற்கப்பட்டு பின்னர் கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு தலைமையக வளாகத்தினுள் அமைந்திருக்கும் இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர்களை நினைவு படுத்தி நினைவஞ்சலியும் செலுத்தினார்கள்.
பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு 6 ஆவது பீரங்கிப் படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற பகல் விருந்தோம்பல் நிகழ்வுகளிலும் பங்கேற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas shoes | Nike News