22nd November 2019 14:20:55 Hours
பொறியியல் காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் A.G.D.N ஜயசுந்தர அவர்கள் 23 ஆவது படைப் பிரிவின் 22 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (20) ஆம் திகதி பூனானையிலுள்ள படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
புதிதாய் பதவியேற்று வருகை தந்த படைத் தளபதிக்கு தலைமையக வளாகத்தினுள் வைத்து 11 ஆவது சிங்கப் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
புதிய படைத் தளபதி அவர்கள் ‘செத் பிரித்’ சமய அனுஷ்டான சமய ஆசிர்வாதங்களின் பின்பு தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் படைத் தளபதி தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து சிறப்பித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | Nike Shoes