22nd November 2019 14:10:55 Hours
புதிதாய் பதவியேற்ற கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் இம் மாதம் (18) ஆம் திகதி சேனபுரையில் அமைந்துள்ள கண்டகாடு புணர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
மறுவாழ்வுக்கு உட்பட்ட புணர்வாழ்வு அங்கத்தவர்கள் தங்கியிருந்த இடங்களை பார்வையிட்டு அவர்களது சுகசெய்திகளை விசாரித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டு அவர்களது புதிய திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தார்.
மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்கள் இவர்கள் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு அவர்களது குறைநிறைகளை கேட்டறிந்து இங்குள்ள அங்கத்தவர்களது ஆன்மீக வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த அவர், புணர்வாழவளிக்கப்பட்ட அங்கத்தவர்களது தற்போதைய வசதிகளை மேலும் ஆராய்ந்து மேலும் முன்னேற்றத்திற்கான சாத்தியங்களை பெற்றுத்தருமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் திம்புளாகளை ஆரன்ய செனசேனாய விகாரையின் விகாராதிபதி மில்லெனி சிறியலங்கார தேரர் அவர்களையும் சந்தித்து அவரது ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் திரு பண்டுக அபேவர்தன அவர்களையும் இம் மாதம் (20) ஆம் திகதி சந்தித்து அவருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மாவட்ட செயலாளருடனான இச்சந்திப்பின் போது கிழக்கு பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான முக்கியதுவத்துவத்தை பற்றி கலந்துரையாடப்பட்டன. bridge media | Nike for Men