24th November 2019 12:30:48 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிப்புரியும் 300 க்கும் அதிகமான படையினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து (21) ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.
அதன்படி யாழ் பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் முன் முயற்சியால் பலாலியில் உள்ள 5 ஆவது இலங்கை இராணுவ சேவை படையணியின் படையினரின் ஏற்பாட்டில் இரத்த வங்கிக்கு ஆரம்பத்தில் இரண்டு இலக்க எண்ணிக்கையிலான யாழ் படையினர்களினால் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 300 க்கும் அதிகமான படையினர் இரத்தம் வழங்க மனிதாபிமான தேவைக்காக முன்வந்தனர்.
இந்த திட்டமானது பலாலி இராணுவ மருத்துவமனையின் ஒருங்கிணைப்பில் அதிகாரிகள் மற்றும் படையினரின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த தேவையை கவனத்திற் கொண்டு இரத்தம் வழங்கப்பட்டன. இரத்த நன்கொடை வழங்கும் சந்தர்பத்தில், யாழ் பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் வனிகசூரிய, சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் அந்த இடத்திற்குச் சென்று மருத்துவ ஊழியர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் உரையாடினார்.
இந்த திட்டத்திற்கு இராணுவம் அளித்த பெரும் ஆதரவுக்கு யாழ் போதன மருத்துவமனை மற்றும் மருத்துவ பணியாளர்கள் தனது நன்றிகளை தெரிவித்தனர். short url link | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ