Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2019 13:30:50 Hours

62 ஆவது படைப் பிரிவினரின் பங்களிப்புடன் ‘கட்டின பூஜை’ நிகழ்வுகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவு படையினர்களால் அலிவங்குவ போதிருக்கராம விஹாரையின் வருடாந்தம் இடம் பெறும் 'கட்டின பூஜா” நிகழ்வானது 62 ஆவது படைப் பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த 2019 நவம்பர் மாதம் 11 – 12ஆம் திகதி இடம் பெற்றன.

இப் பூஜையில் ‘கட்டின சீவர’ ஊர்வலத்தில் கிராமவாசிகள் மற்றும் பக்தர்களுடன் படையினர்களும் பங்கேற்றன, பின்னர் இரவு முழுவதும் ‘பிரித்’ பூஜை நடைபெறுவதற்கு முன்பு விஹாரை வளாகத்தில் ‘போதி பூஜை’ நிகழ்வும் இடம்பெற்றன. அடுத்த நாள் காலையில் ‘ஹீல் தான’, நிகழ்வு இடம் பெற்றதுடன் அனைவருக்கும் இலவச உணவை வழங்கப்பட்டது.

பட்டாலியன்களின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 62 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் அதிகாரிகள், படைப்பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 100க்கும் அதிகமான படையினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.affiliate link trace | Womens Shoes Footwear & Shoes Online