Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2019 14:15:55 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் பிரியாவிடை நிகழ்வு

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு கடந்த (20) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றன. இந்த நிகழ்வானது இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர்.தர்மசிறி தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இவரின் பிரியா விடை நிகழ்வு இடம் பெற்றது.

மேலும், விடைபெற்று செல்லும் இந்த வன்னி பாதுகாப்பு தளபதிக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி 8 ஆவது பொறியாளர்கள் படையணியின் படையினரால் மரியாதை அணுவகுப்பு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து உயிர் நீத்த படை வீரர்களின் நினைவு தூபிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் மலர்வலயம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் அனைத்து படையினர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

அத்துடன், விடைப் பெற்று செல்லும் வன்னி பாதுகாப்புப் படை தளபதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து அனைத்து படையினர்களுக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய ஏற்பாடு செய்யப்பட்ட இடை பிரிவு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்தார்.

இறுதியாக, வெளிச்செல்லும் தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு அவர்களின் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்து தெரிவித்து விடைபெற்றார்.

அத்துடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயற்கும் அனைத்து கட்டளை அதிகாரிகள், படைத் தளபதிகள், மற்றும் படையினர் பலரும் வெளியேறும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவரின் இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு முன்னர், (19) ஆம் திகதி செவ்வாய்கிழமை முறையே வன்னி பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு கீழ் இயங்கும் 54, 61 மற்றும் 62 ஆவது படைப் பிரிவு தலைமையகங்களுக்கு முறையான பிரியாவிடை விஜயங்களையும் மேற்கொண்டார்.

வன்னி பாதுகாப்புப் படை தளபதி 54 ஆவது படைப் பிரிவிக்கு விஜயத்தை மேற்கொண்ட போது, 54 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.ஏ.ஐ.ஜே. பண்டார அவர்களால் நுழைவாயிலில் வைத்து படையினரின் மரியாதைக்கு முன்பு அன்புடன் வரவேற்கப்பட்டார். பின்னர், படையினர்களுக்கு உரையாற்றியதுடன், அனைத்து படையினருடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

அதே நாளில் அவர் 61 ஆவது படைப் பிரிவுக்கும் தனது விஜயத்தை மேற்கொண்டார். அதன்படி 61 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.கே.பி.எஸ். கெட்டகும்புர அவர்களால் வரவேற்கப்பட்டார். அத்துடன் அனைத்து படையினருடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

அத்துடன் , வன்னி தளபதி 62 படைப் பிரிவுக்கும் தனது அன்றைய இறுதி விஜயத்தை மேற்கொண்டார். அங்கு அவரை 62 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அன்புடன் வரவேற்றார்.

இதேபோல், அவர் 56, 21, 62 ஆவது படைப் பிரிவுகள் மற்றும் வடமத்திய முன்னரங்க பாதுகாப்பு படைக்கும் கடந்த (17) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது விஜயத்தை மேற்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றார்.

இதேபோல், 56 ஆவது படைப் பிரிவுக்கு விஜயத்தை மேற்கொண்ட இவரை 56 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜாலியா சேனாரத்னே மற்றும் 21 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன ஆகியோர் வரவேற்றனர். அதன்படி வடமத்திய முன்னரங் பாதுகாப்பு படையின் தளபதி மேஜர் ஜெனரல் ரசிகா கருணாதிலக அவர்களால் இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த வன்னி தளபதியை அன்புடன் வரவேற்றார்.

இவருக்கு பதிலாக மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர்.தர்மசிறி அவர்கள் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு பதிய தளபதியாக பதவி நியமனம் பெற்றுள்ளார்.

இந்த நிகழ்விற்கு படைப் பிரிவுகளின் தளபதிகள், படைப்பிரிவு தலைமையங்களின் தளபதிகள், பட்டாலியன் தளபதிகள், அதிகாரிகள், உட்பட படையினர்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் பலர் இந்த பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டன.Buy Kicks | nike air force 1 shadow , eBay