22nd November 2019 14:30:55 Hours
தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களது அவையங்களை இழந்து தியாகம் செய்த அனைத்து சேவையில் இருக்கும் வீர, வீரர்களிடையே தங்களின் உற்சாகமான மன உறுதியையும், துணிச்சலையும், தைரியத்தையும் வெளிப்படுத்தும் முழுமையான நோக்கத்துடன், ஓய்வு பெற்ற இரண்டு படை வீரர்களான 2ஆவது கஜபா படையியைச் சேர்ந்த சாதாரன படைவீர்ர் ஆர்.டபல்யு.வி பியதிஸ்ஸ மற்றும் கடற் படையைச் சேர்ந்த சீப் பெட்டி அதிகாரி எம்.பி. டபல்யு. குமார ஆகியோர் இணைந்து யாழ் நாகதீவு கோவில் தொடக்கம் கதிர்காம கிரிவிஹாரை வரையிலான தங்களது பாதை யாத்திரையினை 22ஆம் திகதி ஆரம்பித்தனர்.
ஓய்வுபெற்ற இந்த இரு வீரர்களும் பல வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி தங்களது அவையங்களை இழந்துள்ள நிலையில் இவர்கள் கதிர்காம கிரிவிஹாரையை நோக்கி தங்களது பாதை யாத்திரையினை மேற்கொண்டுள்ளன. அதன்படி இவர்கள் உறுதியுடன் சில நாட்களில் இந்த பாத யாத்திரையை முடிப்பார்கள் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.
சைகையால் ஈர்க்கப்பட்ட, இந்த பாதயாத்திரையானது வரலாற்றுப் பயணமாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இவர்களை ஊக்கவிக்கும் நிமித்தம் சாலையின் இருபுறமும் இராணுவத் படையினர்கள் கிராமவாசிகளும் வரிசையாக நின்று அவர்களை வரவேற்றதுடன், தங்கள் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் தங்களது யாத்திரையை மேற்கொண்டன.
இவர்கள் யாத்திரையை ஆரம்பிக்கும் முன்னர் நாகதீப விஹாரையின் விஹாராதிபதி அவர்களின் இருவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார். இந்த நிகழ்வில் 52 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி, 512,513,523 மற்றும் 552 ஆவது படைப் பிரிவுகளின் பிரதி புனர்வாழ் பணியகத்தின் தளபதிகள், 'எலர' கடற்படை முகாமில் கட்டளை அதிகாரி, இலங்கை ராணுவ அதிகாரிகள் மற்றும் கடற்படை மற்றும் இரு படைகளிலும் உள்ள படையினர் பலர் கலந்து கொண்டனர்.latest Nike release | Nike