22nd November 2019 15:00:51 Hours
இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் 22 ஆம் திகதி காலை ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் இராணுவ அதிகாரிகளுடன் அலுவலகத்துக்கு வருகை தந்த பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அவர்கள் பெளத்த மகா சங்க தேரர்களின் ஆசிர் வாதத்தை பெற்றுக் கொண்டதுடன் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கினையும் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற ‘செத் பிரித்’ மத வழிபாட்டின் பின்னர் மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும், இந்த நிகழ்வானது அனைத்து பதவி நிலை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் புதிய அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேலும், கஜபா படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் இப் பதவிக்கு நியமிக்க படும் முன்னர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக கடமையாற்றினார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று சென்ற மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறுப்பிட தக்க விடயமாகும். buy footwear | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf