Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2019 13:00:50 Hours

புதிய ஜனாதிபதி தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு

இலங்கையின் எதிர்கால தொலைநோக்கு அணுகுமுறை எதிர்கால செழிப்பு, பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் (19) ஆம் திகதி காலை சமய அனுஷ்டானம் மற்றும் முப்படைகளின் இராணுவ மரியாதையினை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முப்படையினரின் அணிவகுப்புத் மரியாதையை தொடர்ந்து புதிய ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு தலைமை அதிகாரி, முப்படைத் தளபதிகள் ஜனாதிபதி செயலாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.மேலும் புதிய ஜனாதிபதி அவர்கள் பாரம்பரிய வெஸ் நடனக் கலைஞர்களின் நடன நிகழ்வுடன் பிரதான நுழைவாயில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தலைமை அதிகாரி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன அவர்கள் முப்படைகளின் தளபதியுடன் இணைந்து அணிவகுப்பு மரியாதையை பரிசித்தனர். மேலும் இராணுவத்தின் 21 துப்பாக்கி சூட்டு மரியாதையை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கியதனை அடுத்து அவர் தனது அலுவலகத்திற்கு சென்றார். இவர் கஜபா படையணியில் பல தசாப்த காலங்களுக்கு முன்னர் சேவையாற்றியுள்ளார். மேலும் புதிய ஜனாதிபதியவர்களுக்கு கஜபா படையணி, கடற் படை மற்றும் விமானப்படையினரால் மரியாதை வழங்கப்பட்டது.

மேலும் முருத்தெட்டுவ ஆனந்த நாயகே தேரர், ஓமல்பே சுமனரத்ன தேரர், கெட்டமன்னே குணானந்த தேரர் மற்றும் இன்னும் சில பௌத்த தேரர்கள் மற்றும் மகா சங்க உறுப்பினர்களால் 'செத் பிரித்' என்று வணக்க வழிப்பாடுகளில் ஈடுபட்டு புதிய ஜனாதிபதிக்கு ஆசீர்வாதங்களை வழங்கியதினை அடுத்து, ஜனாதிபதி அவர்கள் தனது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்கும் முகமாக கையொப்பத்தை வைத்தார். அதேவேலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி பி.பி ஜயசுந்தர அவர்களிடம் நியமன கடிதத்தினை வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். bridge media | Nike Air Max 270