19th November 2019 22:55:20 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் கபில உதலுபொல அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தில் சேவையாற்றி இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன், 2019 நவம்பர் மாதம் (19) ஆம் திகதியன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.
அதற்கமைய, இருவருக்கும் இடையிலான சந்திப்பில் ஓய்வுபெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரியுடன் இராணுவத் தளபதி அவர்கள் எதிர்காலத்தில் அவரது திட்டம், அனுபவங்கள் தொடர்பான எண்ணங்களைப் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் முடிவில், இராணுவ தளபதி அவருக்கு சிறப்பு நினைவு சின்னம் வழங்கி நல்வாழ்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். short url link | Jordan Ανδρικά • Summer SALE έως -50%