Header

Sri Lanka Army

Defender of the Nation

18th November 2019 20:28:36 Hours

572 ஆவது படைப் பிரிவின் படையினரால் ஒரு பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விஸ்வமடு பிதேசத்தில் அமைந்துள்ள 57 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 572 ஆவது படைப் பிரிவில் பணியில் இருக்கும் 6 ஆவது சிங்க படையணியின் படையினரால் ஆழமான விவசாய கிணற்றில் விழுந்த ஒரு பெண்ணின் உயிர் (14) ஆம் திகதி வியாழக்கிழமையன்று தீவிர நடவடிக்கையின் பின்னர் காப்பாற்றப்பட்டது.

அதற்கமைய பாதிக்கப்பட்ட இந்த பெண்ணான திருமதி பத்மநாதன் கேமலதா இவர் விஸ்வமடு மேற்கில் உள்ள தோட்டடி பிரதேசத்தில் வசிப்பவராவர், இவர் 40 அடி ஆழத்தில் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்ததை தொடர்ந்து அருகில் வசிக்கும் படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய படையினரால் துரதிர்ஷ்டவசமாக இப் பெண் உயிர் காப்பாற்றப்பட்டார். இந்த பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக படையினர்கள் பல நுட்பங்களை துல்லியமாகப் பயன்படுத்தி மிகவும் சவாலான முறையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த பணிகள் மேஜர் யு.கே.பி. சுபசிங்க அவர்களின் தலைமையில் மீட்புக் குழுவினரால் , தங்கள் உயிரைப் பணயம் வைத்து அந்த பெண்ணை வெளியே எடுத்து மிக சிரமத்துடன் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. அதனைத் தொடர்ந்து முதலுதவிக்கு பின்னர் பாதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

படையினரால் சரியான நேரத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளுக்கு உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் , அயலவர்கள், படையினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டன. Sport media | Nike for Men