14th November 2019 21:32:08 Hours
சமாதான நடவடிக்கை பணிகளின் நிமித்தம் இலங்கையிலிருந்து மாலி நாட்டிற்கு சென்று எமது நாட்டிற்கு இம் மாதம் (14) ஆம் திகதி மீள் வருகை தந்த இராணுவத்தினரை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர்.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 243 அங்கத்தவர்கள் அமைதி காக்கும் பணிகளிற்காக மாலி நாட்டிற்கு சென்று இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்களை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே அவர்கள் வரவேற்றார். best Running shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat