Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2019 18:03:47 Hours

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் உயரதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இராணுவ விளையாட்டுதுறை பணியகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க அவர்கள் இலங்கை இராணுவத்தில் நீண்டகால சேவையின் பின்பு ஓய்வூதியம் பெறுவதற்கான காலத்தை நெருங்கியமையால் இன்று 13 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த இராணுவ உயரதிகாரியை இராணுவ தளபதி வரவேற்று இராணுவத்தில் ஆற்றிய பாரிய சேவைகளை கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் இராணுவ தளபதியவர்களால் இவரது இராணுவ சேவையை கௌரவித்து நினைவுச் சின்னமொன்று பரிசாக வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். affiliate tracking url | Buy online Sneaker for Men