Header

Sri Lanka Army

Defender of the Nation

09th November 2019 16:04:16 Hours

இராணுவ தளபதி அவர்கள் படையினர்களுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக உறுதி

"எங்கள் இராணுவத்தால் எதிர்காலத்தில் தாய் நாடு பாதுகாக்கப்பட்டு ஒன்றுபடும் மற்றும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான ஒழுக்கம், தியகம், தொழில், கௌரவத்தையும் நான் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறேன் ” என்று (8) ஆம் திகதி புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தின் திறப்பு விழாவில் போது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது சுருக்கமான உரையில் தெரிவித்தார்.

"கடந்த காலங்களைப் போலவே, சதுரங்க படைப்பிரிவின் கீழ் இராணுவத்தின் அனைத்து சக்திகளும், முந்தைய நாட்களில் இருந்ததைப் போலவே, முப்படையினரும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன, அதேபோல் ஆரம்பத்தில் இருந்தே, இந்த கட்டிட நிர்மாணிப்பதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பெரிதும் ஆதரவளித்துள்ளனர், இது இராணுவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமைகிறது, ஏனெனில் இது அனைவரினதும் பாதுகாப்பு தேவைகளுக்கும் அதிக செயல்திறனையும் வழங்க முடியும். அனைத்து நிர்வாக சவால்களையும் மீறி, இந்த திட்டத்திற்காக அரசாங்கம் ஏராளமான பணத்தை செலவிட்டுள்ளது என்றார்.

"இந்த திட்டத்திற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழங்கிய பூர்ண ஒத்துழைப்பில் 10 மாடி கட்டிடம் நிர்மாணித்து முடிப்பதற்காக, முப்படையின் பொறியியலாளர் படையினர், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அளித்த பங்களிப்புக்காக இலங்கை இராணும் நன்றியை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்காலத்தில், தாய்நாட்டின் பாதுகாப்பும், நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடுகளையும், ஒழுக்கம் மற்றும் தொழில் ஒழுக்கம் உறுதிப்படுத்தப்படும் என்றும் நான் உறுதியளிக்கிறேன் ” என்று இராணுவ தளபதி தெரிவித்துக் கொண்டார். Best jordan Sneakers | Men’s shoes