Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd November 2019 05:39:54 Hours

65ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்;; வசதிகள் ஏற்பாடு

ரிவேஸ் ஒஸ்மோஷிஸ் இயந்திரத்தினை பயன்படுத்தி வழங்கப்படும் சுத்தமான குடிநீர்;; வசதிகளானது துனுக்காயிலுள்ள 65ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இவ் ரிவேஸ் ஒஸ்மோஷிஸ் இயந்திர ஆலையின் இணைப்பினூடாக 65ஆவது படைத் தலைமையகத்தின் நீண்டகால தேவை பூர்த்திசெய்யப்பட்தோடு, குறித்த பிரதேசத்தில் கடமைபுரியும் படையினர்கள் சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெரிதும் நன்மையாக அமைகின்றது.

இந்த ரிவேஸ் ஒஸ்மோஷிஸ் இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 5000 லீட்டர் நீர் வழங்க கூடியதாகவிருக்கும் அதேவேலை 65ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமர பெரும அவர்களினால் இவ் இயந்திர ஆலையானது திறந்துவைக்கப்பட்டது. மேலும் அன்மையிலுள்ள 653ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 10ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படைத் தலைமையக படையினர்களுக்கு இவ் ஒஸ்மோஷிஸ் இயந்திரத்தின் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. jordan Sneakers | Nike Air Max 270