Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2019 22:21:25 Hours

படையணிகளுக்கு இடையிலான் கால்பந்தாட்ட இறுதிச்சுற்று போட்டி

இலங்கை இராணுவத்தின் 2019 ஆம் ஆண்டு படையணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம் மாதம் (30) ஆம் திகதி கொழும்பு குதிரை பந்தயதிடலில் கால்ப்பந்தாட்ட ரசிகர்கள் ஏராளமானோரது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த இறுதிச்சுற்று போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்கள் வரவேற்றார்.

கால்பந்தாட்ட இறுதி சுற்றுப் போட்டிகள் இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் இராணுவ சேவைப் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்றதுடன் இந்த போட்டியில் இராணுவ சேவைப் படையணி இலேசாயுத காலாட் படையணியை தோற்கடித்து வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டு சம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டனர்.

வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ தளபதியின் கரங்களினால் வெற்றி கேடயங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், கால்ப்பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Running Sneakers Store | 『アディダス』に分類された記事一覧