Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2019 21:53:50 Hours

அனர்தத்தினால் பாதிப்புக்குள்ளான பிரதேசவாசிகளுக்கு படையினரால் போக்குவரத்து வசதிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 24 ஆவது படைபிரிவின் கீழ் இயங்கும் 242 ஆவது படைத் தலைமையத்தில் பூரண ஏற்பாட்டில் 24 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியினரின் பங்களிப்புடன் அம்பாறை லகுஹல பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிப்புற்று போக்குவரத்து வீதித்தடைகளுக்கு உள்ளான பிரதேசவாசிகளது போக்குவரத்துக்களை சீர்படுத்தும் நோக்கதுடன் படையினரால் அப் பிரதேசத்தை சேர்ந்த பிரதேச வாசிகளுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இப் பிரதேசவாசிகளை இராணுவ ”யுணி பப்பல்” கனரக வாகனங்களில் ஏற்றி சென்று இவர்களது போக்குவரத்து தேவைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணான்டோ மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய படையினரால் இந்த பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு தளபதி அவ்விடத்திற்கு சென்று படையினருடன் உரையாடி இந்த அனர்த்த பணிகளுக்கு தனது ஒத்துழைப்பை வழங்கி வைத்தார். அத்துடன் இந்த பணிகளில் கடற்படையினரும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike footwear | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK