Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2019 12:00:46 Hours

பொறிமுறை காலாட் படையணியினரது பயிற்சி தினமன்று இடம்பெற்ற பயிற்சிகள்

பொறிமுறை காலாட் படையணியின் பயிற்சி தினமானது இம் மாதம் (25) ஆம் திகதி தம்புள்ளையிலுள்ள ஹால்மில்லேவையிலுள்ள படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த பயிற்சியின் போது விரிவுரைகள், உடற்பயிற்சிகள் இடம்பெற்றன.

இந்த பயிற்சிகள் பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ ஊடக பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

பயிற்சி நாளில் பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த 84 அதிகாரிகளும் இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த 76 அதிகாரிகளும் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த பயிற்சி நெறியின் போது ‘தீவிரவாதம் வெடித்ததால் ஏற்படும் சிரமங்கள் - கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராட இலங்கை இராணுவத்தின் பங்கு’ என்ற தொனிப்பொருளின் கீழ் விரிவுரைகள் இடம்பெற்றன.

அதன் பின்பு, இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ‘இலங்கையில் உள்நாட்டு வன்முறை மற்றும் பெண்களின் எதிர்காலம்’ எனும் தலைப்பில் விரிவுரைகள் இடம்பெற்றன அத்துடன் பொறிமுறை காலாட் படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் எஸ்.ஜே பிரியதர்ஷனவும் விரிவுரைகளை மேற்கொண்டார்.

மேலும் பொது பேச்சாளர் செல்வி பேர்னாடீன் ஜயசிங்க அவர்களினால் அன்றைய தின மாலை அதிகாரிகளிடையே நுட்பத்துறை மற்றும் அறிவுத் திறமையை மேம்படுத்துவது தொடர்பான விரிவுரைகள் இடம்பெற்றன. bridge media | Air Jordan