Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2019 12:50:46 Hours

வன்னி படையினர்களுக்கு சமையற்கலை பயிற்சி

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 242 படை வீரர்களுக்கு இரண்டு நாள் சமையற்கலை விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இடம்பெற்றன.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கல்கிஷ்ச ஹோட்டலின் பிரசித்தி பெற்ற சமயற்கலை நிபுணர் கலாநிதி பெபில்ஷ் அவர்கள் மேற்கொண்டார்.

விழிப்புணர்வானது 21 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது பூரன ஏற்பாட்டில் இடம்பெற்றன.

இந்த பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ் வழங்கு நிகழ்வானது இம் மாதம் (27) ஆம் திகதி இடம்பெற்றன. இப்பயிற்சிகளை சிறப்பாக மேற்கொண்ட படையினர்களுக்கு சமயற்கலை நிபுணர் கலாநிதி பெபில்ஷ் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி, படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy footwear | Sneakers