Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2019 12:46:46 Hours

இராணுவத்தினரால் விஷேட தேவையுடைய நபர்களுக்கு வாகனம் வழங்கி வைப்பு

பொறிமுறை காலாட் படையணியின் ஏற்பாட்டில் தம்புளை ஹல்மில்லேவ பகுதியிலுள்ள விஷேட தேவையுடைய நபர்கள் 4 பேரைக் கொண்ட குடும்பத்தினருக்கு இவர்களது தேவைகள் நிமித்தம் முச்சக்கர வண்டியொன்று நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த முச்சக்கர வண்டிகளை பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ ஊடக பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து அவர்கள் வழங்கி வைத்தார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ மனித உரிமை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் A.G.D.N ஜயசுந்தர, பொறிமுறை காலாட் படைத் தலைமையகத்தின் மத்திய கட்டளை தளபதியான கேர்ணல் எஸ். ஜே பிரியதர்ஷன, பிரதி மத்திய கட்டளை தளபதி லெப்டினன்ட் கேர்ணல் கே.கே.எஸ் பெரகும் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

இராணுவம் மற்றும் சிவில் சமூகத்திற்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விஷேட தேவையுடைய இரண்டு ஆண்கள் மற்றும் இரு பெண்களுக்கு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்த வாகனம் வழங்கி வைக்கப்பட்டன.

பொறிமுறை காலாட் படையணியின் பிரதி கட்டளை தளபதி லெப்டினன்ட் கேர்ணல் கே.கே.எஸ் பெரகும் அவர்கள் நன்கொடையாளி ஒருவருடன் தொடர்பு கொண்டு அவரது நிதியுதவியுடன் இந்த முச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார். Nike air jordan Sneakers | Nike